இனிய தருணங்கள் (23)
பேரறிஞர் அண்ணாவுடன் முத்தமிழறிஞர் கலைஞர். (1959)
தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்ற பேரறிஞர் அண்ணாவுடன் ஆளுநர் உஜ்ஜல்
சிங், திருமதி உஜ்ஜல்சிங், அமைச்சர்கள் கே.ஏ. மதியழகன், இரா.
நெடுஞ்செழியன், கலைஞர், சத்தியவாணிமுத்து, (நிற்பவர்கள் : இடமிருந்து
வலமாக) செ. மாதவன், எஸ்.ஜே. சாதிக் பாட்சா, எம். முத்துசாமி, ஏ.
கோவிந்தசாமி. (மார்ச் 6, 1967)
போக்குவரத்துத் தொழிலாளிகளுடன் கைகுலுக்கி மகிழ்கிறார்
கலைஞர். (ஏப்ரல் 10, 1967)
தமிழ்நாடு சங்கீத நாடக சங்க விருதை முத்தமிழறிஞருக்கு
வழங்குகிறார் பேரறிஞர் அண்ணா. (ஏப்ரல் 22, 1967)
ஆளுநர் சர்தார் உஜ்ஜல் சிங், திருமதி உஜ்ஜல் சிங் உடன் தமிழ்நாடு
முதலமைச்சர் கலைஞர் மற்றும் அமைச்சர்கள் கே.ஏ. மதியழகன், (நிற்பவர்கள் :
இடமிருந்து வலமாக) செ. மாதவன், எஸ்.ஜே. சாதிக் பாட்சா, ஏ. கோவிந்தசாமி,
சத்தியவாணிமுத்து, எம். முத்துசாமி. (பிப்ரவரி 10, 1969)
ஆளுநர் சர்தார் உஜ்ஜல் சிங் உடன் கலைஞர் தலைமையிலான விரிவுபடுத்தப்பட்ட
அமைச்சரவையில் அமைச்சர்கள் சத்தியவாணிமுத்து, கே.ஏ. மதியழகன், ஏ.
கோவிந்தசாமி, ப.உ. சண்முகம், (நிற்பவர்கள் : இடமிருந்து வலமாக) ஓ.பி.
ராமன், எஸ்.ஜே. சாதிக் பாட்சா, செ. மாதவன், சி.பா. ஆதித்தனார், கே.வி.
சுப்பையா, எம். முத்துசாமி. (பிப்ரவரி 15, 1969)
வெளிநாடு சென்று திரும்பிய முதலமைச்சர் கலைஞரை வாழ்த்திப்
பாராட்டுகிறார் தந்தை பெரியார். (ஜூன் 29, 1970)
விடுதலை நாள் விழாவில் தமிழ்நாடு ஆளுநர், அமைச்சர்
பெருமக்களுடன் கலைஞர். (ஆகஸ்டு 15, 1970 )
தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் உள்ளிட்ட அமைச்சர்
பெருமக்களை வாழ்த்துகிறார் தந்தை பெரியார். (மார்ச் 12, 1971)
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்
செய்யப் புறப்படுகிறார் கலைஞர். (மார்ச் 1, 1972)
தந்தை பெரியாருக்குத் தாமிரப் பத்திரம் வழங்குகிறார்
கலைஞர், அருகில் ஆசிரியர் கி. வீரமணி. (அக்டோபர் 13, 1972)
கூவம் ஆற்றில் படகு சவாரியைத் தொடங்கி வைத்து, படகுப்
பயணம் மேற்கொள்ளும் கலைஞர், அருகில் கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன், ம.பொ.
சிவஞானம்,
ஜோதி வெங்கடாசலம் ஆகியோர் உள்ளார்கள். (பிப்ரவரி 4, 1973)
காஞ்சிபுரத்தில் அண்ணாவின் அன்னையுடன் கலைஞர்.
(செப்டம்பர் 15, 1974)
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்
செய்யப் புறப்படுகிறார் கலைஞர். (மார்ச் 25, 1989)
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட கலைஞருடன்,
ஆளுநர் டாக்டர் எம். சென்னாரெட்டி மற்றும் அமைச்சர் பெருமக்கள். (மே 13,
1996)
தமிழ்நாடு ஆளுநரின் பிறந்தநாள் வாழ்த்தை மகிழ்ச்சியுடன்
ஏற்றுக் கொள்கிறார் கலைஞர், அருகில் முரசொலி மாறனும் அமைச்சர்
பெருமக்களும். (ஜூன்
3, 1996)
1996 இல் திருக்குவளையில் தனது இல்லத்துக்குச் சென்ற
கலைஞர் விருந்தினர் பதிவேட்டில் எழுதிய குறிப்பு. (ஜூன் 18, 1996)
விடுதலை நாள் அன்று கோட்டையில் கொடியேற்றி வைத்து
மக்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைக்கிறார் கலைஞர். (ஆகஸ்டு 15, 1996)
சென்னைப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டத்தை பல்கலைக்கழக வேந்தரும்,
தமிழ்நாடு ஆளுநருமான சுர்ஜித் சிங் பர்னாலாவிடமிருந்து பெறுகிறார் கலைஞர்.
அருகில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், சோனியா காந்தி (செப்டம்பர் 5,
2008)
கலைஞருடன் ஸ்டாலினும் கனிமொழியும். (ஜனவரி 18, 2013)
செய்தியாளர் சந்திப்பில் கலைஞர்
டேப்லெட்டில் செய்திகளை வாசிக்கும் முத்தமிழறிஞர் கலைஞர்